அவன் நினைவுகள் அழிவதில்லை

எனக்கே எனக்கென்று
அவனை நான் நினைத்தேன்
ஆனால் அவனோ
என்னையும் என் காதலையும்
உதாசீனப் படுத்தி விட்டான்.
என் வாழ்வில் கனவாகிப் போன
அவனுக்காக...........
அவன் நினைவுகளை சுமந்து வரும்
கவிதைகளோடு வாழ்கின்றேன்
காலம் கரைவது கூட தெரியாமல்....