நீயாக நான்

நான் நானாக இல்லை
நீ நீயாக இருக்கிறாயா?
உன் விழிச் சுழலில்
சிக்கி என் உயிர்
துடித்தபோது
நான் நானாக இல்லை
நீ யாராக இருக்கிறாய் ?
உன் விழியில் விழுந்து
உன்னில் கலந்தபோது
நான் நானாக இல்லை
நீ நீயாக இருக்கிறாயா ?
என் இதயத்தை நீ
கரையானாக அரித்தபோது
நான் நானாக இல்லை
நீ
வேறாக இருந்தாயா ?
உன் உறவுகள்
என்னை தாக்கியபோது
நான் நானாக இல்லை
நீ கண்ணில் நீராக இருந்தாயா ?
உலகத்தின் ஏச்சுக்கள்
சித்திரைச் சூரியனாய்
என்னைத் தகிக்கும்போது
நான் நானாக இல்லை
நீ நிழல்தரும்
ஆலமரமாய் இருந்தாயா ?
உன் உறவுகளும் என் உறவுகளும்
நம்மைச் சேரவிடாமல்
தடுக்கையிலே
நான் நானாக இல்லை
நீ
எந்தன் வேராக இருப்பாயா?