சாதிகள் இல்லையடி
![](https://eluthu.com/images/loading.gif)
சாதிகள் இல்லையடி பாப்பா,
என்றோர் சரித்திரம் படைத்தானடி பாப்பா,
அவன் என் சாதி என்போர் மத்தியில் ,
நான் என் செய்வேனடி பாப்பா,
சன்னதியில் சாதியில்லை என்றோர்,
அறப்போர் செய்தானடி பாப்பா,
அவன் செய்த தியாகம் ,
என்னானதடி பாப்பா,
காதல் சாதியை தாண்டியது,
என்றோரடி பாப்பா,
கதலித்தோரை கல்லரை,
கொண்டு செல்வோர் ,
மத்தியில் ,
என் செய்வேனடி பாப்பா?
சாதி சாக்கடை என்று,
பிதற்றுவோர் மத்தியிலே,
அவர்தம் சாதி,
பன்னீராகுமாடி பாப்பா,
சாதி ஓழிக என்போரெல்லாம் ,
சாதி சங்கத்தின் தலைவனடி பாப்பா,
சரித்திரத்தை புரட்டி பாரடி பாப்பா,
சாதியத்தை கலைந்தோரெல்லாம்,
இன்று , சரித்திர நாயகனடி பாப்பா!
என்று முடியுமோடி பாப்பா,
இந்த சாதிதாகமடி பாப்பா,
கருவில் உள்ள சிசுவின் ,
உதிரத்தில் ஊட்டப்பட்டதோடி பாப்பா,
இந்த சாதியெனும் சதி!
பதில் சொல்வாயடி பாப்பா,
இது பயனற்று போகுமோடி பாப்பா,
பிறந்த குழந்தை அறியுமோ,
தான் பிறந்த குலம் இதுவென்று,
பின் , ஏன் பிதற்றுகிறது ,
பெரியவன் ஆன பின்பு ,
மொழியற்ற ஊமையாய் ,
வழியற்ற குருடனாய்,
செவிற்ற செவிடனாய்,
மற்றுதடி பாப்பா,
நான் என் செய்வேனடி பாப்பா ?
இனவாரியாய் பிறிந்தோமடி பாப்பா,
பின்பு மொழிவாரியாய் பிறிந்தோமடி பாப்பா,
நாளை சாதி வாரியாய்,
பிரி என்றால் என் செய்வோமடி பாப்பா?
பதில் இருந்தால் கூறடி பாப்பா,
இந்த விழியற்ற மனிதமிருகத்திற்கடி பாப்பா!
அன்புடன்,
சத்யசிம்பு