கண்ணாடி

என் வீட்டு நிலைக்கண்ணாடி
என்னை காட்டுது எத்தனை அழகாய்
அவள் எங்கள் குடும்பத்தோடு தினம் பேசும்
உயிரற்ற ,ஆனால் உயிருள்ள கண்ணாடி ............

சிரிக்கும் போது சிரிப்பும்
அழும்போது அழுகையும்
எங்களுடைய செயல் அனைத்தும்
பிம்பமாய் பிரதிபளிப்பவள் அவள் ........

புது சட்டையை போட்டு
எக்கி எக்கி பார்க்கும் தம்பி
அரும்பு மீசையை
கிள்ளி பார்த்துகொண்டிருக்கும் அண்ணன்
தனது மஞ்சள் முகத்தை தடவி பார்த்து
பெரிதாய் பொட்டு வைக்கும் அம்மா
தலை முடி முதல் தாடி வரை
ஒழுங்கு செய்யும் அப்பா
நரைத்த முடிக்கு டை அடிக்கும் தாத்தா
வெள்ளை முடிகளை
எண்ணிக்கொண்டிருக்கும் பாட்டி ................

எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீக்கமற நிறைந்த கண்ணாடி
ஓய்வே இல்லாமல் ஒவ்வொரு நாளும்
உழைத்து உழைத்து இளைத்து
இன்று உடைந்தே போய்விட்டால் ..............

பிரிய மனமில்லாவிட்டாலும்
அவள் நியாபகமாய்
ஒரு சிறு துண்டு கண்ணாடி
இன்றுவரை என் புத்தக பையில்
பத்திரமாய் .............

எழுதியவர் : வினாயகமுருகன் (2-May-13, 11:19 pm)
Tanglish : kannadi
பார்வை : 112

மேலே