விரதம்..........!!

வரதட்சனை பெற்றுத்தான்
வரனாவேன் என்போனே--உனது
கரம் பற்றுவதைவிட
கன்னியாய் காலமெல்லாம்
மண்மீது வாழ்வது மேல்!

பணம் வாங்கி ஒருத்தி
படுக்கை விரித்திட்டால்-அவளை
இனம் கெட்ட வேசியென
இழிக்கும் சமுதாயமே
இவனும் வேசைப் பயலே!

கல்யாணச் சந்தையில்
காசுக்கு விலையாகும்---ஒரு
நெருப்பு விதையை
புருசனாக்கி எரிவதோ!
விரதமிருப்பேன் வீட்டிலே!

சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.

எழுதியவர் : சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா. (3-May-13, 6:15 am)
பார்வை : 110

மேலே