ஒரே ஓடத்தில்தான்
.....இன்றைய சிந்தனைக்கு.....
நாமெல்லோரும் பல கப்பல்களில் வந்திருக்கலாம். ஆனால் நாமிருப்பது இப்போது ஒரே ஓடத்தில்தான்.
-----மார்டின் லூதர் கிங்
WE ARE IN THE SAME BOAT . ஒரே நிலையில் இருப்பதைச் சொல்லும் ஆங்கில சொல் வழக்கு.
மார்டின் லூதர் கிங் அமெரிக்க கருப்பு இன மக்களுக்காக குரல் கொடுத்தவர் ; போர் தொடுத்தவர் . காந்தியின் அஹிம்சா வாதத்தில் பற்றுள்ளவர்.அவரும் கொடியவனின்
குண்டினால் மாண்டார்.வரலாற்றுப் புத்தகத்தில் வாடாத நித்திய புஷ்பம் அவர் .
எதை எதையோ பற்றி எழுதுகிறீர்கள் . நவீன் , வெள்ளூர் ராஜா கார்த்திக் பாரதி, கவி கண்மணி , கவி மகள் பானு , அஹமது அலி மற்றும் ஆர்வமுள்ள கவி நண்பர்கள் மார்டின் லூதர் கிங் பற்றி கவிதையோ கட்டுரையோ தரலாமே !
இன வேறுபாடுகளை களைந்து மனிதன் மனிதனாக் வாழ வேண்டும் என்பதற்காக தன்னுயிர் தந்த உத்தமர்கள். மனித
இனத்தின் ஆதரிச அடையாளங்கள் . பாராட்டு உண்டு பரிசு பூச்செண்டு பட்டம் எல்லாம் இல்லை. நவீன் ,கண்மணி ஏதோ சொல்கிறார்கள்.
சிங்கத் தமிழர்தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிக்கலாமே ! ம் ம் ....ரொம்ப காஸ்ட்லி
தந்தத் தமிழ் சிற்பிகளுக்கு சந்தக் கவிதை நிச்சயம் உண்டு .
மார்டின் லூதர் கிங் பற்றி கவிதையோ கட்டுரையோ அல்லது இரண்டுமோ நானும் தருவேன் .
----அன்புடன்,கவின் சாரலன்