ஊரும் உயிரும்

நெரிசல், ஜனசந்தடி
புறமுதுகிட்டு நிற்கும் பேருந்துகள்
வித விதமான வண்ணங்களாலான
இனிப்புகடை
கல்லூரி தேவதைகள் வலம்வரும்
வளையல் கடை
vkc மியாமி குஷின் செருப்பு விளம்பர பதாகைகளை
தாங்கிய செருப்பு கடை
போண்டா வடை வாசமீசும்
தேநீர் கடை
நந்தினி குளிர்பானகடை
சார்சாரென கையேந்தும் பிச்சைகாரர்கள்
புறப்பட தயாராகும் பேருந்தை
அறிவிக்கும் ஒலிபெருக்கி
புறக்காவல் நிலையம்
திருடர்கள்
விபச்சாரிகள் என
எந்த வித ஆரவாரமும் இல்லாதது
கிராம பேருந்து நிலையங்கள்
ஒரு வேப்பமரமோ
ஒரு புளியமரமோ தான்
பேருந்து நிலையமாய் இருக்ககூடும்
ஏனைய கிராமங்களிலும்.

எழுதியவர் : (3-May-13, 2:21 pm)
பார்வை : 138

மேலே