..............மனைவி வாழ்க.............
அக்கினி வார்த்தைகளின் சொந்தக்காரி,
வாய்திறந்தால் அப்படியே சாம்பலாக்குவாள் !
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுதற்கு,
நல்லதொரு உதாரணம் அவள் !
பொறுத்தார் பூமியாள்வார் !
பூமாதேவி தாங்கும் தரைமகள் என்பதையெல்லாம்,
கணநேரத்தில் சந்தேகப்பட்டு சபிக்கவைக்கிறவள் !
அரைமணிநேரம் அருகமர்ந்து பேசினால்,
எரிமலைக்கு அருகே சென்றுவந்த உணர்வு தருபவள் !
மண்டைகாயவைத்து மதிக்காமல் குட்டுவைப்பதில்,
முதுகலைப்பட்டம் முறையாய் பெற்றவள் !
என்னகேட்டாலும் அடிவிழாதகுறையாய்தான்,
பதில்வந்து எதிர்நிற்கும் அவளிடம் !
சின்னத் தவறுக்கெலாம் சிங்கமாகவே கர்ஜிப்பாள் !
விலகி ஓடினாலோ விரட்டி விமர்சிப்பாள் !
கலகம்வரும்வரை கனல்மூட்டியே இருப்பாள் !
விவரிக்க விவரிக்க விம்மிப் புடைக்கிறது நெஞ்சு !
எங்கே இதைப்படித்து நையப்புடைந்து,
நசுக்கி எரிந்து விடுவாளோ என்று !
முடித்துவிடுதல் நலம் என் குடுமி அகப்படுதற்குள் !
எது உண்மையோ இல்லையோ,
கண்ணகிதான் கண்டிப்பாய் மதுரையை எரித்திருப்பாள் !
அதற்கும்முன் பலபேரை மிதித்திருப்பாள் !
ஆங் !!
சொல்லமறந்தேன் முக்கியமானதை !
வாழ்க மனைவிமார்கள் வளமான பலத்துடன் !!