இந்தியாவிற்கு எதிரி யார் ?

இந்தியாவிற்கு எதிரி யார் ?

பகமை கொண்ட பாகிஸ்தானா
எல்லையை திருடும் சைனாவா
துரோகம் செய்யும் இலங்கையா
எது நமக்கு எதிரி?

மூன்று பக்கமும் கடல்
ஒரு பக்கத்தில் மலை
இயற்கையே அரணாக
பின்பு எது நமக்கு எதிரி?

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனையா
வெடித்து சிதறும் அணுசக்தியா
பூகம்பமா இல்லை சுனாமியா
எது நமக்கு எதிரி?

உயிர்களை கொள்ளும் நோய் தொற்றா
வானில் இருந்து வரும் விண்மீனா
எரிமலை வெடித்து வழியும் கற்குழம்பா
எது நமக்கு எதிரி?

மூன்றாம் உலகப்போரா
இல்லை
அந்நிய நாட்டின் படையெடுப்பா ?

இல்லை இல்லை
நமக்கு எதிரி நாமேதான் ...........

இந்தியா எனபது ஒரு நாடு
மதங்கள் ஜாதிகள் எத்தனையோ
ஒற்றுமை எனபது நமக்குள் இல்லை
வேற்றுமை படுகிறோம் ஜாதி மதத்தால் ........

ஒத்துவராத தனித்துவ கொள்கை
ஒருத்தருக்கு ஒருத்தர் மாறுபட
எண்ணங்களில் தோன்றும் பிரிவு
எங்கும் தெரியுது அதன் விளைவு ........

எல்லைகள் இருக்குது பாதுகாப்பாய்
தொல்லைகள் பிறக்குது நாட்டுக்குள்ளே
வெட்டி மடியிது மக்கள் தினம்
எங்கும் ஓடுது ரத்த ஆறுகள் .........

மொழிசண்டை மதசண்டை ஜாதிச்சண்டை
தினம் தினம் பெருகும் வன்முறை இங்கே
விட்டு கொடுக்கும் மனம் போனதால்
செத்து போகுது மனித இனங்கள் ........

வரம்புகள் இல்லாத தவறுகள் தொடர
அரசின் சொத்துக்கள் அழிவு பாதையில்
மதமும் தேவை மனிதமும் தேவை
எவரும் புரியும் நிலையம் தேவை ........

அன்பை வளர்க்கவும் வம்பை மறக்கவும்
நற்போதனை சொல்லும் மதத்தின் மார்க்கம்
எவரையும் கொள்ள மதங்கள் இல்லை
மனிதம் போற்றவே மதமும் மார்க்கமும் .......

நம்மை நாமே கொன்றது போதும்
நம்மில் பிரிவினை இனியும் வேண்டாம்
தொடரும் காலம் இனியும் இருந்தால்
நமக்கு எதிரி நாம் மட்டுமே ...........

எழுதியவர் : வினாயகமுருகன் (5-May-13, 7:54 pm)
பார்வை : 122

மேலே