ஜாதி என்னும் பேய்

கண்ணுக்கு தெரியாத பேய்கள்
காட்டில் சுற்ற
கண்கூடாய் தெரியும் பேய்கள் நிறைய
நாட்டில் சுத்துது .............

பிடித்த பிடியை சீக்கிரம் விடாது
அமைதி குலைக்காமல் ஆத்திரம் அடங்காது
ரத்தம் குடித்து தாகம் தீர்க்கும்
ரத்த காட்டேரி பேய் இது ..........

இறக்கம் மறந்த பேய் இது
எவரையும் கொள்ளும் பேய் இது
இழிவு செயலை செய்து செய்தே
உடம்பை வளர்க்கும் பேய் இது ............

கூறு கெட்ட பேய் இது
பல குற்றங்கள் செய்யும் பேய் இது
ஊரை எரிக்கும் பேய் இது
ஒற்றுமை குலைக்கும் பேய் இது ..........

விவஸ்த்தை கெட்ட பேய் இது
வெறி பிடித்த பேய் இது
மிருகமாய் மாறி மனிதனை கொள்ளும்
மாறுவேஷ பேய் இது ........

அடம் பிடிக்கும் பேய் இது
அடங்காத பேய் இது
ஆட்சிகள் நடத்தும் கட்சிகளாலே
வளர்க்கப்படும் பேய் இது ..........

திமிர் பிடித்த பேய் இது
தீண்டாமை பேய் இது
உயிர்களை தின்று வயிற்றை நிரப்பும்
உக்கிரமான பேய் இது .............

அடிமை என்றும் ஆண்டை என்றும்
அர்த்தம் கொள்ளும் பேய் இது
வாழ பிறந்த மனித இனத்தை
சாகடிக்கும் பேய் இது ........

சாபம் கொண்ட பேய் இது
சாகா வரம் வாங்கிய பேய் இது
மனிதம் மடிந்து தான் மட்டும் வாழ
தவமிருக்கும் பேய் இது ...........

புரிதலும் தெளிதலும் மனம்மாறுதல் எனும்
மந்திரம் தானே இதை வெல்லும்
மனிதம் போற்றி ஒற்றுமையோடு
மானுடம் காத்து வாழ்ந்திடுவோமே ..............

எழுதியவர் : வினாயகமுருகன் (5-May-13, 8:43 pm)
Tanglish : jathi ennum pei
பார்வை : 154

மேலே