பெண் படும் பாடு

வாக்கப்பட்டு தான் வந்தேன்-
வாயில்லா பூச்சிக்கு
திராணி இல்லா ஆண் மவனிடம்
தாலியும் தான் வாங்கினேன்
இரட்டை வடம் சங்கிலி இல்லன்னு
ரெண்டு வேல சோறு போதுமுன்னு
மாமியா சொன்னா
அஞ்சு பவுன் நகைக்கு
பஞ்சு மெத்தை எதுக்குன்னு
நாதனா கேட்டா
மாத்திய மாலை காயவில்ல
மனசு தான் காய்ந்து விட்டது
அத்து போட்டு நானும் வந்துருவேன்
வெறும் பய மகளாக
வாழா வெட்டினு ஊர் சிரிக்கும் போது
ஆத்தாவும் அப்பனும் இரத்த கண்ணீர் -வடிப்பாக
அத பார்க்க திராணி இல்லை - இந்த பாவிக்கு
மச்சு வீட்டு மருமகனு
வீராப்பா சொல்லி திரிவேன்
அப்பன் ஆத்தா பெருமைக்கு - நான்
வடிக்கும் கண்ணீர் தொழுவத்து
எருமைக்கு மட்டும் தான் தெரியும் .

எழுதியவர் : கலைநாகராஜ் (6-May-13, 11:08 am)
பார்வை : 203

மேலே