பரிமாற்றங்கள்

எழுத்தாலும் எண்ணத்தாலும்
சொல்லாலும் செயலாலும்
கருத்தாலும் கவிதையாலும்
நடந்திடும் பரிமாற்றம் என்றுமே
விடியலை கண்டிட வழிவகுக்கும் !

பழியும் பகையும் பறந்திட்டால்
வழியும் தெரியும் வாழ்வதற்கு !
பதவியும் பவிசும் மறந்திட்டால்
சுகமும் தேங்கிடுமே நெஞ்சத்தில் !
புன்னகை நிலையாய் தங்கிடுமே !

பரிமாற்றம் தந்திடும் மாற்றங்கள்
உவகை பெருக்கிடுமே உள்ளத்தில் !
மாற்றங்கள் பல்வகை இருப்பினும்
நெஞ்சத்தின் நிலையான மாற்றமே
நெடுநாள் வாழ்விற்கு அச்சாரம் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (6-May-13, 11:47 am)
பார்வை : 82

மேலே