கண்ணீர் தேடல்

சிட்டு குருவியின் சிணுங்கள் எங்கே ..........
மயிலின் நடனம் எங்கே .............
மரத்தின் நிழல் எங்கே ........
குழந்தைகளின் சிரிப்பு மழை எங்கே ........

தமிழுக்காக உயிர் நீத்த செம்மல் எங்கே .......
கவிதைகள் தமிழில் பாடி
தமிழ் வளர்த்த தேசத்தில்
என் தமிழ் மொழி எங்கே...........

வீரம் செழித்த என் தமிழ் மக்களின்
மீசை முறுக்கிய வீரம் எங்கே ..........
படைகள் பல வந்த பொழுதிலும்
வால் முனையில் வீழ்த்திய
வீர தமிழன் எங்கே..........

வேர்வை சிந்தி வேளாண்மை
பல செய்து வெற்றி கண்ட
விவசாயி எங்கே.........

மரணம் நெருங்கிய பொழுதிலும்
மனம் தளராத தமிழன் எங்கே.........
வில் கொண்டு எறிந்த போதும்
வீர மரணம் வேண்டும் என்று
நெஞ்சை நிமிர்த்து காட்டிய தமிழன் எங்கே ................

யானை படையும், குதிரை படையும்
கொண்டு தமிழ் வளர்த்த
தாய் நாட்டில் தமிழ் மொழி எங்கே...........

வள்ளுவர் வகுத்த வாழ்க்கை முறை எங்கே.........
பாரதி தேடிய புதுமை பெண் எங்கே ............
தேடலின் விடியல் எங்கே..........
இரவின் முடிவு எங்கே ...........

உலகின் முடிவு எங்கே........
உண்மையின் நீதி எங்கே..........
உணர்வின் வெளிச்சம் எங்கே........
என் தமிழ் மொழியின் செழிப்பு எங்கே ..........

கம்பன் வாழ்ந்த என் தமிழ் நாட்டில்
தமிழுக்கு பஞ்சமா ?????
என் தேடலுக்கு விடியல்
கிடைக்கும் வரை தொடரும் என் கண்ணீர் தேடல்..............


பிழை இருந்தால் மன்னிக்கவும் ..............

எழுதியவர் : ChellamRaj (7-May-13, 3:15 pm)
சேர்த்தது : rajchellam
பார்வை : 74

மேலே