அவளின் பிண்டம் அல்லவா நான்

பிறந்தவுடன் போற்றபட்டவள்
இறுமாப்புடன் வளர்க்கப்பட்டவள்
தாய் பாலுடன் கலாச்சாரத்தை ஊட்டபெற்றவள்
நேர்நெறி கொண்டவள்
குழந்தை தன்மை மிக்கவள்
காதலின் ஆழம் அறிந்தவள்
தேன் வார்த்தைகளின் ராணி இவள்
இப்படி ஊரார் சொல்லினர் என்னை பற்றி
என்னிடம் கேட்டால் நான் சொல்லுவேன்
என் தாயின் வளர்ப்பின் பரிணாமங்கள் அவை
இவை அனைத்தும் என் தாய் வீட்டு சீதனம்
எனக்கு
நான் நானாக வாழ என் தாயின் வழிகாட்டல்
நான் நாணமுடன் கூறுவேன்
கருவறையில் என்னை சுமந்தவளின்
கணுக்காலில் படிந்திருக்கும் அழுக்கு கூட
என்னை விட தூய்மையானது
அவள் போல் வாழ நான் பயில்கிறேன்
தூய்மை நிற சுடரொளியே
உன் போல் வாழ
நான் தவம் கொள்கிரேனடி
அவள் உடலில் இருந்து வெளி வந்த
வெறும் சதை பிண்டம் என்பதற்கே
இவ்வளவு மதிப்பு இருக்குமெனில்
உன்னை போல் வாழ
காலம் முழுமையும் உன் காலடியில் தவம்
செய்ய வேண்டுமடி என்
தூய்மை நிற வழிகாட்டியே

எழுதியவர் : தர்ஷிகா (7-May-13, 5:22 pm)
பார்வை : 111

மேலே