விண்ணை தொடு தமிழா
விண்ணை தொடு தமிழா…,
ஆகாயம் எல்லை இல்லை…!
எண்ணி முடித்து விடு ….,
நட்சதிரங்கள் அதிகம் இல்லை….!
நம் எண்ணங்களை விட …!!
சந்திரன் குளுமையை பெற்றுகொள் தமிழா…,
அனல் வார்த்தைகள் தேவையில்லை…!
சூரியனின் வெப்பதினை பெற்றுகொள் தமிழா…,
அகிம்சை மொழிகள் தேவையில்லை….!
அந்நியநாட்டு மக்களை விரட்டிடதேவை இல்லை தமிழா ….,
நீ விழித்திடு ….!
அரசியல் அழுக்கினை துடைத்திடு….!
புது சரித்திம் எழுதிடு…!
மண்ணும் மனிதனும் தூரம் இல்லை...!
“மண்ணாகி போவதற்குள்
மனிதனாய் வாழ்ந்திடு” ஒரு முறை
தமிழா…..!!