எனது முதல் காதல் கவிதை
இந்திரனோ சந்திரனோ யாருடைய பெண் இவளோ !
உச்சி முதல் பாதம் வரை உன் அழகை கானத்தான்
இரு கண்கள் போதாது !
ஈரேழு ஜென்மம் நான் எடுத்து வந்தாலும்
உன் அழகை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது !
மங்கை இவள் தேகம் கான பார்
உலகத் தேவர்களுக்கும் உரக்கம் தான் கிடையாது !
அமுதம் தான் உன் உமிழோ என்று தான்
முக்கோடி தேவர்களும் வரம் வேண்டி தவிப்பார்கள் !
உன் மழலை பேச்சைக் கேட்காமல்
தென்றலும் தடுமாறீ சூறாவளீயாய் மாறியதோ !
வானத்து விண்மீன்கள் உன் கண் அழகை
கானத்தான் மண்ணுலகம் இறங்கியதோ !
குற்றால அருவிக் கூட ஆனந்தமாய்
குளித்தது உன் கூட உறவாடத்தானோ !
நைல் நதியின் நீர்வீழ்ச்சி
உன் வியர்வைக்கு ஈடாகாது !
உன் முகம் தினம் பாராமல்
என் காலை விடியாது !
உன்னோடு வாழாமல்
என் ஆத்மா அடங்காது !

