இல்லை ஓர் பெருஞ்செல்வம்

பிள்ளையின் பசி அறிவதாகட்டும்....
இருப்பதைக் கொண்டு
அதை ஆற்றுவதாகட்டும்.....
பிணி கண்ட போதும்
பணி தொடர்வதிலாகட்டும்.....
இயலாமையை இயல்பாய்
இயம்புவதிலாகட்டும்....
பெருநோய் கண்ட போதும்
புன்னகை மாறா முகமாகட்டும்....
பெருந்தட்டு மக்களின் தாய் போல்
தழுவாவிட்டாலும் .......
நெற்றி முட்டி முத்தங்கள்
இடாவிட்டாலும்...
எண்ணங்கள் எங்கும் .....
தம் மக்கள் நிரப்பி வைக்கும்.....
ஏழையின் தாய் போல்......
இல்லை ஓர் பெருஞ்செல்வம்.....

எழுதியவர் : (9-May-13, 2:14 pm)
பார்வை : 80

மேலே