கவிதையில்லாமல் நீயா ...?

சொல் நான் உன் உயிரா ...?
கவிதை கவிதை என்று இருக்கிறாயே ...
அது உன் உயிரா ...?

கவிதையே என் உயிர் ....!
என் கவிதையின் உயிரே நீதான் ...!
ஏதோ எனக்கு தெரிந்ததுபோல்
கவிதை எழுதுகிறேன்...!!!

நீ படிக்கும் போது தான் என்
கவிதைக்கே அழகு என்றேன் – இன்று
என் கவிதைகள் கூட
உனக்காக காத்திருக்கின்றன
நீ வருவாய் என்ற நம்பிக்கையோடு………!

எனக்காக வராவிட்டாலும் ...
என்கவிதையை வளர்க்க வா ...!
நீ இல்லாமல் கவிதையா...?
கவிதையில்லாமல் நீயா ...?

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (9-May-13, 3:48 pm)
பார்வை : 123

மேலே