புரியவில்லை உன் நட்பு !
உயிர் உலகம் என நீ யாரை நினைத்து
தலையில் தூக்கிவைத்து கொண்டாடினாயோ !
அந்த உயிர் தனக்கென ஒரு உறவு கிடைத்த
சந்தோசத்தில் உன்னை பற்றிய ஒரு நினைவும்
இல்லாமல் புதிய உறவோடு சென்றுவிட்டது !
இனி என்ன செய்ய போகிறாய் ?
குடும்பம் குழந்தை சொந்தம் பந்தம்
எல்லாவற்றையும் விட அந்த உயிர்தான்
எனக்கு முக்கியமென ஒவ்வொரு
நொடியும் நினைத்தாயே ?
தேடிவந்த நல்ல நட்பையும் தொலைத்தாய்!
தூக்கத்தில் கூட அந்த உயிரை
மறந்து விடுவோமாவென்று
கனவிலும் நினைத்தாய் !
கண்விழிக்கும் போது கூட அந்த உயிரின்
முகம் மட்டுமே காணவேண்டுமென
நினைத்தாய் !
எந்த உயிருக்காக எல்லாவற்றையும்
வேண்டாமென உதறி தள்ளிவிட்டாயோ !
அந்த உயிரே உன்னை வேண்டாமென
உதறி தள்ளிவிட்டது !
என்ன செய்வாய் பாவம் ! சும்மாவா
சொன்னார்கள் முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையுமென்று ! உன்னை
தேடிவந்த நட்பும் இதே வேதனைதான்
அடைந்திருக்கும் ! அனுபவி !!
நீ வேண்டாமென எத்தனையோ முறை
என்னை ஒதுக்கிவிட்டாய் !
நீ இருக்கும் இதயம் என நினைக்காமல்
நோகடித்தாய் ! ஆனாலும் கரையை தேடி
முத்தமிடும் அலையை போல்
உன்னை தேடினேன் !
என் தேடலில் உண்மை இருந்ததே !
அன்பு பாசம் அனைத்தும் இருந்ததே ! - நீ
பணத்தை காட்டி பழகியிருந்தால் நான்
அப்போதே உன்னை விட்டு விலகியிருப்பேன் !
ஆனால் பாசத்தை காட்டியல்லவா !
என்னை பலி கெடவாக்கிவிட்டாய்!
யாருக்காகவும் நல்ல நட்பை இழக்காதே!
என்று சொன்னார்கள் ! நானும் அப்படிதானே
உன்னை யாருக்காகவும் விட்டு கொடுக்கவில்லையே ! நீ மட்டும்
எப்படி புதிய உறவுக்காக என் நட்பை
இழக்க துணிந்தாய் !
புரியவில்லை ! என் வாழ்வை போலவே
உன் நட்பும் !