மகனையிழந்த தாயின் கண்ணீர் சிதறல்:-

மகனையிழந்த தாயின் கண்ணீர் சிதறல்:-

தாயுள்ளந் தானெரிய உதிரந் தாங்கருக
மெல்ல நீ வந்து வேதனை போக்காது
செவ்வானமே நீ செல்லமாய் உறங்குதியோ!
சந்தைநாய் குரலொலி நின்காது கேட்கலையோ!

உரிமை யென் னுரிமை நீயென்று
உரிமையோடு நானிருக்க வெறுமையாக்கி போனாயே
பெருமானே நீ பிள்ளையாய் உறங்குதியோ!
பெற்றெடுத்த நின்தாய் கருவறைகதறல் கேட்கலையோ!

பச்சரிசி சோற்றோடு பாயாசமுந் தான்சேர்த்து
நெய்யோடு நானிருக்க நொய்மணல் புதைந்தாயே
மன்னனே நீ கிள்ளையாய் உறங்குதியோ!
வெடித்த நெஞ்ச யிடியொலி கேட்கலையோ!

வாசற்கதவோடு நிலைகண்ணாடியு நின்வரவை கேட்க
உச (ய)ர போனாயே! உசி(யி)ரை விட்டு போனாயே!
வெள்ளமே நீ வெள்ளையாய் உறங்குதியோ!
வேகும் என்னுள்ள வேதனை கேட்கலையோ!

நின் மடிமீது யெனை யிருத்தி
வாயரிசி யிடாது மோசம் செய்தாயே!
பாசமே நீ வேசமாய் உறங்குதியோ!
வாய்பேசா என்வாய் பேசும் பேச்சொலி கேட்கலையோ!

ஒற்றையோலை கூட்டில் ஒருவுசுராய் தனித்திருக்க
பெற்றப்பிள்ளை வுயிர் வற்றி போக
இறப்பே நீ இரக்கமின்றி உயிர் பறித்தயே!
நீ சுருக்காய் வந்தென் சுடர் நிறுத்த மாட்டாயோ!

நன்றி

வாழ்க வளமுடன்

ரா.சிவகுமார்

எழுதியவர் : ரா.சிவகுமார் (9-May-13, 8:34 pm)
சேர்த்தது : siva71
பார்வை : 72

மேலே