கவிதை துணுக்குகள் 3
நிலவில் ஒர் இருள் கண்டேன்
உன் கருவிழியென கொண்டேன்
பட்டாம்பூச்சியின் இறகுகள் பறிக்கப்பட்டது
உனக்கு கொடுக்க முயற்சித்த போது
உன்னை கண்டு கண்ணடிக்கும் தெருவிளக்கை
சரிசெய்ய சொன்னேன் பஞ்சாயத்து தலைவரிடம்.
நாளொன்றுக்கு ஒரு முறை வரும் அமிர்தநீர்
உன் வீட்டு கால்வாயிலிருந்து...
மாங்கொழுந்து முதிர்ந்து இழந்தது
சிவப்புநிறத்தை
அதற்குள் ஒர் கேள்வி நீ மட்டும் எப்படி அதே நிறத்தில் ?
சுழன்ற கலங்கரை விளக்கம் ஒருபுறமாய் நின்றது கடற்கரையில் உன்னை கண்ட உடன்....