..............விசித்திரம்............

ஆசைப்படுகிறது மனது,
நீயில்லாத நாட்களை சுவாசிப்பதற்கு !
ஆபத்தான பள்ளம் அதுவென்றாலும்,
ஆசிர்வதிக்கவேண்டும் நீ உன் பிரிவுதந்து !
மரணத்தின் தன்மையை,
மறுமணம் செய்து வாழ்ந்துபார்க்க,
தவித்துக்கிடக்கிறது மனது !
சொல் காதலா !!
காதல் அதிசயமென்றால்?
அதன் கருப்பொருள் விசித்திரம்தானே?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (11-May-13, 7:11 pm)
பார்வை : 86

மேலே