நான் இன்றைய மங்கன் - பகுதி 2

பேருந்து பயணம்.

இருக்கையில் அமர்ந்திருந்தேன்
எழுப்பி விடப்பட்டேன்.
அது மகளிர் பதிவு இருக்கையாம்

இடம் மாறி உட்கார்ந்து,
மீண்டும் எழும் சூழல் வந்தது
அது
முதியோர் இருக்கையாம்

அடுத்து மாறிய இடமும்
அவசரமாய் பறிபோனது
திறனாளிகள் இருக்கையாம்

கடைசியில் கிடைத்த இருக்கையோ
இரக்கம் வேண்டி பறிக்கப்பட்டது
கர்ப்பணி பெண் ஒருத்தி
வந்து நின்றாள்

மீண்டும் இடம் மாறி உட்கார,
தானாகவே எழுந்து விட்டேன்
குழந்தையுடன் ஒரு பெண்மணி
எதிரில்

காலி இடத்தை கண்கள் தேடின
அதற்குள் நான் இறங்க வேண்டிய
இடத்திற்கே வந்து சேர்ந்தது பேருந்து

பயணம் இனி
நின்று கொண்டே செய்ய
முடிவெடுத்தேன்

ரயில் பயணம்
பயணச்சீட்டு வாங்கும் இடம்
வரிசையில் நின்றிருந்தேன்.

பெண்களுக்கு முன்னுரிமை
கொடுக்கச் சொல்லிய குரல்
என்னை பின்னுக்கு தள்ளியது

தொடர் வண்டி பிடிக்க
ஓடிக்கொண்டிருந்தேன்

தூக்கமுடியாத பயணச் சுமையுடன்
பெண் ஒருத்தி
கையில் குழந்தையுடன் தள்ளாடிய
காட்சி தெரிய

எந்த நடை மேடை எனக்கேட்டு
சுமைதாங்கியாய்
கொண்டு சேர்த்தேன்

இல்லையெனில்
இரக்கமில்லாதவனாம்
குரல் இடித்துரைத்தது
பின்னால் இருந்து

அளித்து முன்னுரிமை
அனைவருக்கும்
பின் தள்ளப்படும்
வாலிபன், நடுத்தர வயது
நான் மட்டுமே
எப்போதுமே

பரிதாபத்திற்குரியவன்
நான் மட்டுமே

ஆயினும்
இரக்கம் மறுக்கப்படுவது
மனதில் பதிவதேயில்லை

அவளுக்கு பிடிக்கும் என்று
தேடிப்பிடித்து தரவிறக்கம் செய்த
பாடல்கள் ஆயிரத்தை தொட்டது
என்னவோ உண்மை.

அவள் விரும்பிய பாட்டை
போட்டு கேட்க வைக்க,
அதை தேடும் பணியிலேயே
முப்பொழுதும் மூழ்கிப் போய்
கைப்பேசியை ஆராய்ந்து
தோல்வியுற்று,

அதற்காகவே
பதிவிறக்கம் செய்து தந்த
கடை உரிமையாளரை தேடி

அன்றாடம்
தலைக்கவசம் கையில் மாட்டி
வெற்றுத்தலையுடன்
இரு சக்கர வாகனம்
தினம் ஒயிலாக
ஓட்டிச் செல்லும்

நான் இன்றைய மங்கன்.

எழுதியவர் : மங்காத்தா (14-May-13, 9:06 am)
பார்வை : 111

மேலே