விதியாவது யாதெனில்...
வாழ்க்கை என்பது ஒர் விளையாட்டு
இதில் வாழ்பவரும் வீழ்பவரும்
விதி நடத்தும் சூதாட்டத்தின் கயவர்களே
என்று பறைசாற்றும் பாதகர்களே...
பறிவு பார்த்து பிறர்க்கு உதவி
செய்த அன்னை தெரசாவும்; புது மெட்டுப்
பொட்டு பல கைத்தட்டு இரகுமான் வாங்கியதும்
விதியாலே என்னும் வீணர்களே...
விதியின் பிடியில் நாம் ஆடும்
பொம்மலாட்டம் தான் வாழ்க்கை
எனறு கூறும் மதி மங்கிய மடையர்ளே...
வாழ்க்கை என்னும் திரைப்படத்தில்
நாம் விதி என்னும் கதைக்கு
இறைவன் இயக்கத்தில் நாம் நடிக்கும் நடிகர்களே
என்று உணரா கூறும் ஊர்குருவிகளே...
விதி என்னும் வீரனை வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் வெல்லவே இயலாது,
முயற்சி செய்து வீழாதீர் என
வசைப் பாடும் வாத்தியக்காரர்களே...
நீ செய்யும் நன்றும் தீதும்
விதி என்னும் புள்ளியில் இறைவன்
போட்ட கோலமே என்று கூறும்
பக்தி பழங்களே பாசமிகு தோழர்களே...
நீங்கள் எல்லாம் என் வினாவிற்க்கு
விடை சொல்லுங்களேன்..
பின் நீங்கள் நம்பும் சொர்க்கமும்
நரகமும் இறைவன் வைத்த பொட்டி கடையா??
நீங்கள் சொல்லும் வடிவம் கொண்ட தெய்வங்களையும்; வடிவமில்லா தெய்வங்களையும் நாத்திகன் வண்ங்குவதும் இல்லை விதியை நம்பி ஏமாறுவதும் இல்லை
நித்தம் இறைவனை துதிக்கும் ஆத்திகன்
தான் விதி என்னும் வலையில் சிக்கி
தோல்வி என்னும் வேடன் பசிக்கு
முயற்சி இல்லா விருந்தாகிறான்
தூதர்களின் வாக்குகளை நம்பும் பெரியோரே
அண்டம் கண்ட அனைத்து மதநூலும்; ஆட்டிபடைக்கும் விதியோன்று இங்கு
இல்லை என்றே பாடம் படிக்கிறது
விதியை மதியால் வெல்லலாம் என்று
தத்துவம் பேசும் மாமேதைகளே- மதியொன்று
உமக்கு இருந்திருந்தால் விதி என்று ஒன்று
இல்லை என்பதை உண்ந்திருப்பாய்!!
இதை உள்வாங்கி விதி என்னும் அறையிலிருந்து
உங்கள் மதிசாவியை கொண்டு உங்கள்
மனம் என்னும் காற்றாற்றை திறந்து விடுங்கள்
அது மலைப் போன்ற எதிர்ப்புகளையும்
உடைத்தெறிந்து கடல் போன்ற வெற்றிகளையும்
உங்கள் கைவசமாக்கும்...
**நான் இந்த சிறிய கிறுக்கள்களை விதியின்பால் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள் என் தந்தைக்காக படைத்தளிக்கிறேன்.