வெளியே தள்ளினேன்
என்னில் புகுந்து
இம்சிக்கும் உன்னை
வெளியே தள்ள போராடுகிறேன்
தள்ளுகிறேன் மெல்லுகிறேன்
இயலவில்லை
நீயோ ஒளிந்து கொண்டாய்
பதுங்கு குழியில்
முயற்சியை விடுவதாயில்லை
ஆயுதத்தை கையிலெடுத்து
அங்கும் இங்குமாய்
உன்னை குத்தினேன்
அப்பாடா உன்னை
ஒரு வழியாக
வெளியே தள்ளினேன்
பல் இடுக்கில் சிக்கிய துரும்பு