சின்ன சின்ன மேகமே !!!
மேகமே! ஏன் என்னை
சுற்றுகின்றாய் சோகமாய்
பல வண்ணம் பல உருவம்
படைத்தது யார் சொல்லு -உன்னை
வயல்வெளி போல் ஏர்கொண்டு
உழுதவன் யார் சொல்லு!!!
வண்ண புடவை கட்டியே
வாத்தியங்கள் முழங்கவே
வான்வெளியில் நடக்கிறாய்
அகிலம் பார்க்க போகிறாய்
அந்த சத்தம் உன்னை தாக்கி
சிதறி போனாயோ -இல்லை
எங்கள் கண்ணில் நீ பட்டு
சிதைந்து போனாயோ!!!
என்னைகடக்கும் மேகமே
உனக்குள் என்ன தாபமா?
மலையின் மேலே பறக்கிறாய்
மனதை தானே பறிக்கிறாய்
உலகை மறக்க வைக்கிறாய்
உயிரை உணர்ந்து நிற்கிறாய் !!!
உன்னை பார்க்கும் நொடியிலே
உலக உருவம் உன்னுள்ளே
உலகை நினைத்து பார்க்கையில்
உருத்தெரியா புகைப்போல
உணர்த்தி செல்கிறாய்
உலகுக்கு உன்னத பாடம்
உலகுருவம் நிலையில்லை என்று !!!
உலகில் உருவம் நிலை இல்லை என்று !!!