அம்மாக்கள் மட்டுமே அம்மாக்களாக முடியும்
பிளஸ்டூவில் பெயிலானபோதும்
கீழ்சாதியில் ஒரு பெண்ணை
காதலிக்கும் சேதி தெரிந்தபோதும்
மல்லிகா அக்காவிடம் உறவுகொண்டதை
கேள்வியுற்றபோதும்
சாந்தி அக்காவிற்காக
திருப்பூரிலிருந்து வரும்போது
உள்ளாடையை பரிசளித்தபோதும்
குடியில் வண்டியோட்டி
கால்முறிந்து படுக்கையில் கிடந்தபோதும்
வீட்டில் வைத்திருந்த இரண்டுபவுன் சங்கிலியை
சீட்டாட்டத்தில் விட்டபோதும்
தண்ணியடிக்க அக்காவிடமும் மாமாவிடமும்
பொய்சொல்லி காசுவாங்கியபோதும்
வேளாவேளைக்கு
சோறுகொண்டுவந்து
அரவணைப்போடு புத்திசொல்லி
சாப்பிட வற்புறுத்தும் போதுதான்
எல்லா உறவுகளையும் ஜெயித்துவிடுகிரார்கள்
அம்மாக்கள்...