ஒரு முறை காதல் சொல்லிட

வார்த்தை கடன் வாங்கி
அழகாய் அடுக்கி வைத்து
பொய்யே கலக்காமல்
புது கவிதை படைத்துவைத்து

நான் கொண்ட சில்லறைக்கு
வெள்ளை காகிதம் வாங்கி
என் மனதின் ஆசையெல்லாம்
உன்னோடு பேச எழுதிவிட்டு

நீ வரும் சாலை வழியே
கால்கடுக்க காத்திருந்து
உன்னிடம் கொடுத்திட ஆயிரம்
தயக்கம் என்னும் பயம் கொண்டு

விதிதான் காதல் என்று
போராடி வெல்ல முயன்று
மதிகொண்டு தோற்று போகிறேன்
மனத்தால் தினம் சாகிறேன்

உயிர்கொடுகுமா உண்மைகாதல்

எழுதியவர் : ருத்ரன் (15-May-13, 8:31 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 76

மேலே