மாமன் மகள்
பள்ளி பருவத்தில்
பட்டாடையில்
என்
இதயத்தில்
பறந்து திரிந்தவள்
என்
மாமன் மகள் ....
கல்லுரி பருவத்தில்
கலகலவென
என்
மனதில் கலந்தவள்
என்
மாமன் மகள்...
அவள் பெயரை
நான்
என் இதயத்தில்
அச்சிட்டு இருந்தேன் !
அவள்
என் பெயரை
திருமண பத்திரிகையில்
உறவுமுறை :
மாமன்
என்று அச்சிட்டு இருந்தால் !!!