கவி சொல்லும் உன் (அவள்)பாத கொலுசொலி 555

பிரியமானவளே...

அதிகாலை பொழுதில்
தூங்கும் கதிரவனை
எழுப்புகிறாய்...

இருளோடு
நிழலாக சென்று...

தூங்கும் குயில்களையும்
மைனாகளையும் எழுப்புகிறாய்...

உன் சங்கீத
கொலுசொலியில்...

தினம் என் செவிகளில்
கேட்பது...

குயிலின் ஓசையா
உன் கொலுசின் ஓசையா...

இருளோடு நிழலாக...

உன்னை தினம்
காத்திருந்து ரசிக்கிறேன்...

என்னை கடந்து
செல்வாய் தினம்...

நீதான் என்பதை
சங்கீதம் பாடும்...

உன் கொலுசொலியும்...

உன் காதோரம் கதை
சொல்லும் சிமிக்கியும் தான்...

காத்திருக்கும் என்னை
நீ காண வழியில்லை...

தினம் விடியும் பொழுது
எனக்கும் விடியும் ஓர் நாள்...

அன்று வருவேன்...

உன்னிடம் என்
காதலை சொல்ல.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (17-May-13, 3:00 pm)
பார்வை : 131

மேலே