காதல் தரிசனம்

நீ போடவில்லை
எனக்கு போட்டோ
ஆனாலும் நீ
போட்டுவிட்டாய்
என் உயிருக்கு
காதல் பூட்டு

நீ தூரம் இருந்தும்
சிரித்துக்கொண்டே
இருக்கிறேன் நீ
என் அருகிலே
இருக்கிறாய்
என்று நினைத்து

காத்திருக்கின்றேன்
வருடங்களை கூட
நிமிடங்களாய் எண்ணி

தூக்கம் விற்று
விழித்திருக்கிறேன்
காற்றலையில்
உன் குரல் கேக்கத்தானடி

வந்தாய்
பேசினாய்
ஐந்து நிமிடங்கள் தான்
என் உள்ளமெல்லாம்
வற்றாத ஆற்றில்
குதிக்கும் மீனைப்போல்
துள்ளியதடி

வையடா போனை
என்றதும் நீ
உடைந்து போகிறேன்
உரிமையுடன்
வையடா என்கிறாய்
என்று நினைத்து
நெகிழ்ந்து போகிறேன்

சுமக்கிறேன் உன்னை
என் உயிரிலே
சுகமாய்
துடிக்குது
என் இதயம்
உன் பெயர் சொல்லித்தானே

சீக்கரம் வீடி
எனக்கு
காதல் தரிசனம்
தாடி

எழுதியவர் : பூவதி (18-May-13, 4:38 am)
பார்வை : 115

மேலே