வரலாற்றில் இன்று

மே 19
1535 பிரெஞ்சு நடுகாண் பயணி ஜாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார்.
1536 இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாம் மனைவி "ஆன் பொலெயின்" வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
1604 கனடாவின் மொன்ட்றியால் நகரம் அமைக்கப்பட்டது.
1649 இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து குடியரசாக இருந்தது.
1848 மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: கலிபோர்னியா, நெவாடா, யூட்டா மற்றும் பல பகுதிகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு $15 மில்லியன்களுக்க்குக் கொடுக்க மெக்சிக்கோ முன்வந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.
1897 ஐரிய எழுத்தாளர் ஆஸ்கார் வைல்டு இங்கிலாந்தின் ரெடிங் சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.
1961 சோவியத்தின் வெனேரா 1 வீனஸ் கோளைத் தாண்டி, வேறொரு கோளைத் தாண்டிய முதலாவது விண்ணூர்தி ஆனது.
1971 சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது.
1978 விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
1991 அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் குரொவேசியர்கள் தமது விடுதலைக்காக வாக்களித்தனர்.
1919: துருக்கிய சுதந்திரப் போர் ஆரம்பம்.
2009: இலங்கையில் 26 வருடகால யுத்தம் முடிவுற்றதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தல் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
2010: தாய்லாந்தில் அரசாங்கத்தற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முறியடிக்கும் நடவடிக்கையை இராணுவத்தினர் நிறைவு செய்தனர்.
நன்றி ;அமர்க்கள நண்பர் Mohaideen