ஐயோ...!.பி.எல்.

ஆடுகளாய்!, மாடுகளாய்!
மனிதர்களைப் பாவித்து
கோடிகளைக் கொட்டிக் கொட்டித்
தேர்ந்தேடுக்குறான்!-பின்பு

தேர்வு கால நேரத்திலே
தேர்ந்தெடுத்த இடங்களிலே
ஆடச் சொல்லுறான்!-மட்டைப் பந்து
ஆடச் சொல்லுறான்!

அழகான நடிகைகளை
அருகினிலே வைத்துக் கொண்டு
பேட்டி கொடுக்கிறான் -அவங்களுக்கும்
பெட்டி கொடுக்கிறான்!

அரைகுறையாய் ஆடையுடன்
ஆட விடுகிறான் ,மைதானத்தில்
அலைய விடுகிறான்-குத்தாட்டம்
போட விடுகிறான்!

அயல்நாட்டுப் பயல்களையும்
அணியில் சேர்க்கிறான்!,அவங்களுக்கும்
பணமூட்டை அள்ளித் தருகிறான்-பாவத்தில்
பங்கு சேர்க்கிறான்!

ஜெயித்தாலும் ,தோத்தாலும்
காசு வாங்குறான் -டி.வி.
விளம்பரத்திலும் தினம் வந்து
காசு பார்க்கிறான்!

அள்ளி அள்ளிக் கொடுத்தாலும்
ஆசை கொள்ளாம ,சூதாட்டம்
ஆடி நம்மை சூடேத்துறான்-ஆமா
சூடேத்துறான்!

புத்திகெட்டு மட்டைப்பந்தைப்
பார்த்த மடையனோ!தினம்
பிழைப்பை விட்டுத் தடுமாறித்
தெருவில் நிற்கிறான்!

அரசியலில் ஊழலுன்னு
அலுத்துப் போயித்தான்,மக்கள்
ஆங்காங்கே விளையாட்டப்
பாக்க வந்தாங்க!

அங்கேயும் ஊழலுன்னு
ஆகிப்போச்சுன்னா...இனி ,
எங்கேதான் போவாங்க
ஆள விடுங்கப்பா...!

எழுதியவர் : கோவை ஆனந்த் (19-May-13, 6:03 pm)
பார்வை : 135

மேலே