பசியாறிய குட்டிகள்

உன்னியுன்னி பருகின குட்டிகள்,
வைத்தவாய் எடுக்கமுடியாமல்
அயர்ந்தன அம்மாவின் மடுவின்மேல்.

உருகி உளறித் தவித்த காதலன்,
உட்புக முயன்று தோற்றும் கனிந்த
முகம் புதைத்தான் மடுவிடையில்.

உரையில் செருகிய வாளின் உயிர்,
வழிந்து பருகிய தேனில் இறுகி,
வளைந்து குலைந்து நின்ற நிலா.

எழுதியவர் : தீ (19-May-13, 9:42 pm)
பார்வை : 119

மேலே