என்று தணியும் இறைவன் ஆசை

திருக்கோவில் ஒன்னு கட்ட ஊரல்லாம் பணம் கேட்க....
மகனுக்கு முடியலயாம் மருத்துவமனை செல்ல வழில்லை

"ஆத்தா உன் பிள்ளையை நீ தான் பாத்துக்கணும்...இந்தாங்க அம்பது ரூபா என இருந்த காச மாரியம்மா கொடுக்க..."

பிச்சை கூட போடாத பெரும்பணக்காரன் லட்ச லட்சமாய் கொடுக்க.....

கட்டியதோர் கோவில்
வெட்டியதோர் ஆடுன்னு ஊரே கொண்டாட

அடுத்த நாள் காணுமாம் ஆத்தாளோட
நகையை....

அம்பாள் குத்தம் ஆகுமாம் போலீஸ் எல்லாம் வேண்டாம்.....பூசாரி சொன்னாராம்...

போட்ட திட்டம் ஓகே...நகை எல்லாம் நமக்கே...

.பூசாரி கிட்ட சொன்னானம் புது பணக்காரன்....

ஊரல்லாம் பேசுனாங்க...."உனக்கு விஷயம் தெரியுமா? மாரியம்மா மகன் செத்து போய்ட்டான்...ஏதோ தெய்வ குத்தமாம் பூசாரி சொன்னாரு.....

எழுதியவர் : அர்ஜுன்கார்த்திக் (4-Dec-10, 9:11 pm)
சேர்த்தது : arjunkarthik007
பார்வை : 323

மேலே