வாக்கு வங்கி அரசியலை பாஜக எதிர்க்கிறது - நரேந்திர மோடி ..! அது என்ன வாக்கு வங்கி...?
நாட்டை முன்னேற்றும் ஒரே குறிக்கோளுடன் வாக்கு வங்கி அரசியலை எதிர்த்து வரும் கட்சி பாஜக தான் என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் முதல்வர் ரமன் சிங் - ன் சட்டசபை தொகுதியில் நடந்த 'விகாஷ் யாத்ரா ..? பேரணியில் கலந்து கொண்டு தான் மோடி இவ்வாறு கூறினார்.
நாட்டில் கடந்த ஐம்பது வருடங்களாக வாக்கு வங்கி அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் மேலும் அதை வளர்த்தார்கள். ஆனால் பாரதிய ஜனதா கட்சி மட்டுமே, முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு இந்த வாக்கு வங்கி அரசியலை எதிர்த்து வருகிறது.
பாஜக பொதுச் செயலாளர்களில் ஒருவரும், குஜராத் போலி என்கவுண்டர் வழக்கின் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டவருமான அமீத் ஷாவுக்கு உ .பி. மாநில கட்சிப் பொறுப்பை அளித்துள்ளார்கள்.கிடக்கட்டும் இவைகள்...
அது என்ன முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி...? சங் பரிவார்களின் முன்னேற்றமா..? பாஜக வின் முன்னேற்றமா..? பார்ப்பனர்களின் நலன்களின் முன்னேற்றமா..? ஆட்சியில் அதிகாரத்தில், வியாபாரத்தில் வணிகத்தில் மேலும் மேலும் குவிந்து வரும் குஜராத்திகளின் பனியாக்களின் நலனின் முன்னேற்றமா..? என்று கூறாமல்,
'அருஞ்சொற் பொருள்' காண்க என்றால் எப்படி...? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!
சங்கிலிக்கருப்பு