ஐ.பி.எல் விளையாட்டா...சூதாட்டமா...? ஆனால் பத்ரிஸ் தத் - ம் அவர் மனைவியும் ஏன் மரணம் அடைந்தார்கள்..?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக அதுதான் பெட்டிங் எனப்படும் பணப் போட்டி நடந்து விட்டதாக ஒரு புக்கிஸ் மற்றும் மூன்று விளையாட்டு வீரர்களை கைது செய்து உள்ளது டில்லி காவல் துறை..இதில் முக்கிய விளையாட்டு வீரரான ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டது தான் பெரும் அதிர்ச்சியாக உள்ளன என்று ஊடகங்கள் புலம்ப ஆரம்பித்து விட்டன.
இவர்கள் மீது புகார் பதிவு செய்த தில்லி காவல் துறை ஆய்வாளர் பத்ரிஸ் தத் மற்றும் அவரின் மனைவி இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்..துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளனர். பதிரிஷ் தத் என்ற அதிகார் டெலிபோன் பேச்சுக்களை ஒட்டுக் கேட்பதில் நிபுணத்துவம் பெற்றவர் என்ற செய்தியும் உள்ளது, பல்வேறு செய்திகளை பெற்று ஆதாரங்களை வைத்திருந்தவர்...இவர் ஏன் கொல்லப்பட்டார் என்று இன்று வரை தெரியவில்லை என்கிறார்கள்...விளையாட்டு ஆர்வலர்கள்...!
அணைத்து விளையாட்டுமே சூதாட்டமே என்று பலர் கூறிவரும் நிலையில்..
பணத்தை மூட்டை மூட்டையாக கொட்டும் ஐபிஎல் என்ன புனிதத்தனம் நிறைந்த விளையாட்டுத் தான் என்று யாராவது சொல்ல முடியுமா என்ன..?
சங்கிலிக்கருப்பு