காதல் தண்டனை

காதல் கூட
சட்டப்படி தான்
செய்கிறது
குற்றம்
செய்தவர்களை விட
செய்ய தூண்டியவர்களுக்கே
அதிக தண்டனை !
உன்னை பார்த்தது
கண்களாய் இருந்தாலும் ...
உன்னோடு பேசியது
உதடுகளாய் இருந்தாலும் ...
பார்க்க தூண்டியதும்
பேச தூண்டியதும்
இதயம் தான் !
அதனால் தான்
தண்டனையை
இதயத்திற்கு கொடுக்கிறது காதல் !!!