கண்ணன்

பசுகூட்டம் நடுவினிலே
பாற்கடல் தலைவன் அவன்
பண்ணிசை கொடுக்கிறான்
புல்லகுழல் இசையாலே ............

பூவாசம் தாங்கி வரும்
தென்றல் அது மெல்ல தீண்ட
ஆள் மயக்கும் இசையோடு
ஆட்டுவிக்கிறான் ஆளிலையான் .........

கருணை பொங்கும் அவன் கண்கள்
கார்முகில்நிற சுருள் முடிகள்
மீன் வடிவில் நீள்கண்கள்
தேன் சொட்டும் அவன் உதடு ...........

மண்ணை தின்னும் கண்ணன் அவன்
வெண்ணை திருடும் திருடன் அவன்
பெண்களை கவரும் கல்வன் அவன்
ஆடு மேய்க்கும் அழகன் அவன் ...............

சேலை பதுக்கும் விளையாட்டு
சேட்டை செய்யும் அவன் பாங்கு
உலகம் தேடும் அவன் பேச்சு
உலகம் தெரியும் அவன் வாயில் ..........

நண்பர்களோடு சேர்ந்திருப்பான்
அன்பர்களோடு வாழ்ந்திருப்பான்
நான் போற்றும் கண்ணன் அவன்
நான் தேடும் கண்ணன் அவன் ...........

எழில் பொங்கும் அவன் அழகு
எங்கும் நிறைந்த அவன் கருணை
நன்மை செய்யும் நல்லவர் உள்ளம்
அவன் வாழும் இனிய இல்லம் ........

எழுதியவர் : வினாயகமுருகன் (22-May-13, 7:59 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : Kannan
பார்வை : 124

மேலே