துடைத்தெறியுங்கள்

விதி விட்ட வழியென்று
வாழ்க்கையை வறுமையில்
நகர்த்தும் மெல்லின மக்களே!!!

அதிகார மழையிலே
அகங்காரப் பயிர்கள்
முளைத்து விட்டதற்காக
முனங்கி கொண்டிராமல்
முற்றுமுன் முற்றுகை இடுங்கள் ...

முத்திரை பதியுமுன்
நித்திரையில் சித்திரை
காணுங்கள் நிந்திப்பவர்களுக்கு
நீங்கள் புகட்டலாம் பாடம்.....

ஒவ்வாததை வேதமாக
கொள்ளாமல் உரிமையை
மட்டுமே உடைமையாக்குங்கள் ....

உதட்டில் உட்காரும்
புன்னகைக்காக மயங்காமல்
உண்மையை ஊடுருவிப் பாருங்கள் ......

பட்டி தொட்டியெங்கும்
பாட்டுபோட்டு
பதவியேற்ற பின்பு
வெட்டி ஊரில் நமக்கென்ன பேச்சு
என்று வியாக்கியானம் பேசும்
வீணர்களை வீசி எறியுங்கள் ....

கூட இருந்தே குழிபறிக்கும்
குள்ள நரி கூட்டங்களை
குணத்தை வைத்தே
கூறு போட்டு குதறி எடுங்கள் .....

மகுடமோ மரணமோ
ஒன்றிருந்தால் மற்றது நம்மிடம்
அண்டுவதில்லை .. பயம்விடுத்து
நீதியின் நீள் வழியில் செல்லுங்கள் .....
வாழ்க்கை ஒன்று ..வாழ்வது நமக்கே ....

எழுதியவர் : bhanukl (23-May-13, 8:31 pm)
பார்வை : 385

மேலே