வாழ்வியல் ஓவியம்...

பொங்கும் கோப நுரைகளை
பொறுமைத் தூரிகையால் வருட
பொலிவுறும் வாழ்க்கை ஓவியம்...!!
--------
சாதிக்கும் எண்ண நுரையை
சதி முறி தூரிகையால்
சத்திய முயற்சியில் பதிக்க
சாத்தியமாகும் வெற்றி ஓவியம்...!!
-------
ஆத்திரம் தரும் சமூக சிதை நுரையை
ஆறப்போடாமல் விழிப்புணர்ச்சி
ஆளுமைத் தூரிகை கொண்டு நேர்
ஆக்கிட எதிர்சந்ததி வாழ்வு
ஆனந்த ஓவியமே...!!
---நாகினி