நன்றி

நேசத்துடன் சிரிக்கும் ஆட்டோ ஓட்டும் அக்கா !

பழம் வாங்க அம்மா பேரம் பேசும் போது
இரண்டு திராட்சைச் சுளைகளை இலவசமாக என்
வாயில் திணிக்கும் பழக்கார இலட்சுமி பாட்டி !

சாலையைக் கடக்க தினமும் கைபிடிச்சு உதவும்
பள்ளியின் எதிர்புறம் பெட்டிக்கடை சண்முகம் தாத்தா !

நல்ல படிடா இல்லைன்னா என்னை மாதிரி வெயில்ல வெல்டிங் வைச்சு வேகணும்னு இலவச
அட்வைஸ் கொடுக்கும் சாலையோர பெயர்
தெரியாத அண்ணாவுக்கும் என அனைவருக்கும் சேர்த்து என் தாமதமான‌ நன்றிகள் !

எழுதியவர் : kannan (23-May-13, 9:52 pm)
Tanglish : nandri
பார்வை : 101

மேலே