பெண்ணே..

பெண்ணே ரௌத்ரம் பழகு..
அகவை மறந்து அத்து மீறும் ஆண்களிடத்தில்.
பண்பை மறந்த பச்சோந்திகளிடத்தில்..

காதல் வசனத்தில்
காம வார்த்தை தேடும்
கயவர்களிடத்தில் ..
மனித நேயம் மறந்த மாக்களிடத்தில்.
தொட்டாசிணுங்கி அல்ல..
அனிச்ச மலரும் அல்ல
சூரியனை சுட்டெரிக்கும்
சூறாவளியாக புறப்படு புதியதோர் பாரதம் படைப்போம்..

எழுதியவர் : பூ.கவிதா (24-May-13, 6:43 pm)
சேர்த்தது : B.kavitha
பார்வை : 108

மேலே