கதை சொல்லும் .............!

"பள்ளியில் கிறுக்கி
மதிப்பெண் இட்டு
விடைத்தாள் என்றாய்
உன் வினாத்தாளும் நான் தானே ?
கவிதைகள் எழுதி
காதல் கடிதமாக்கினாய்
உன் கனவுகள் சுமந்தேன்
என்னை வண்ண கலவையில்
நனைத்து ரூபாய் என்றாய்
நம் இருவர் நிம்மதியும்
அறவே போனது
முத்திரை குத்தி
பத்திரம் ஆக்கினாய்
பாதுகாப்பதே பெரும்பாடானது .
காகிதம் கடைசியாய் சொன்னது
எப்போது என்னை கசக்கி
கூடையில் எறிவாய்
காத்திருப்பேன் விடுதலைக்காக..."

எழுதியவர் : nandhalala (25-May-13, 6:23 pm)
சேர்த்தது : nandhalala
பார்வை : 104

மேலே