சிறு சிதறல்கள் ....
* ஒரு குவளைத் தேநீரில் ஒளிந்திருக்கிறது
எனக்கான ஏதாவதொரு கவிதை !
* வீட்டுச் சுவற்றில் குழந்தை
வரைந்த பாதி ஓவியம் !
தோற்றுப் போனது !
என் தேசிய விருது பெற்ற
ஓவியம் !
*குழந்தைகள் கிறுக்கிடும்
வெள்ளைத்தாள்களை
உற்றுப் பாருங்கள் நன்றாக !
கிடைத்திடும்
உங்களுக்கோர் ஓவியம்
கிறுக்கல்கள் வழியே !