பெண்ணை போற்றுவோம் ....

மின்சாரத்தை
கடத்தும் மின்கடத்தியை போல
காம இச்சைகளை
கடத்தும் கடத்தியாய்
பெண்ணை பார்க்காதே .......

பாலில்
ஒளிந்திருக்கும்
வெண்ணை போல
அவளில்
ஒளிந்திருக்கும்
அங்கங்களை
பூதகண்கொண்டு தேடாதே .....

காமம் கண்ணைமறைக்க
மது மதியை அழிக்க
பள்ளி செல்லும்
சிறுமியை
பச்சிலம்குழந்தையாய்
பாராமல் படுகுழியில் தள்ளாதே .......

தேகம் தேடும்
உணவாய்
பெண்ணை தேடாதே ......
ஹார்மோன்
தூண்டுதலுக்கு அடிமையாகாதே ......

தாயாய்....
சகோதரியாய்....
மனைவியாய்.....
இன்னும் பல உறவுகளாய்
உன்
உணர்வுகளில்
கலந்தவள் பெண் என்பதை மறவாதே !!!

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (28-May-13, 12:20 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 227

மேலே