அழகே..

காற்றின் மெல்லிசை ஒலிக்க
பூங்குயில்கள் கானம் இசைக்க
மொட்டவிழ்ந்து அரும்புகள்
மலர்களாகும் நேரம் ...
கிழக்கின் கீழ்வானத்தில்
மணப்பெண்ணின் நாணச்
சிவப்பு கொண்டு
நீள்கடலின் நீலவண்ண
நடுவில் உதிக்கும் ஆதவன்
கதிரவனைக் கண்டு மயங்கி
மீண்டெழும் கமலத்தின் இதழ்கள் ..
அழகாய் மலரும் அதிகாலை
நேரத்தில்
ஆற்று நீரில் தலை முழுகி
ஆதவனை தரிசிப்பவளே
அழகின் முகிலே - எல்லை
கடந்த எழிலே !- தவிக்கும்
விழிகளுக்கு தரிசனம் தர வருவாயோ !..

எழுதியவர் : (28-May-13, 6:36 pm)
சேர்த்தது : B.kavitha
Tanglish : azhage
பார்வை : 74

மேலே