காவல் (தந்தை மகனுக்கு...)
காவல் நிலையம் - இன்று
கால் மிதிக்கக் கூசும்
களங்கப்பட்ட இடமாய்....
காவல் நிலையங்கள்
ஆளுங்கட்சிக்கு
ஏவல் நிலையங்களாய்....
ஆளும் கட்சிக்கு
வாளும் கேடயமும்
வில்லும் அம்புமாக
காவலர்கள் பல நேரம்.
காவலர்கள்,
அதிகார வாணலியில்
அதிகம் வறுபட்டது
இவர்கள் இதயம் தான்
அதன் மென்மையே
தொலைந்து விடும் அளவுக்கு
காக்கிச் சட்டைக்குள்
கடமை உணர்வை
கருக்கி விட்டு
கயமை உணர்வை
பெருக்கிக் கொண்டோரும் உண்டு,
இனம் காணு அவர்களை!

