ஜனநாயகம் (தந்தை மகனுக்கு...)

ஜனநாயகம் தெரிந்து கொள்
மலையென்றாலும் தவறுகளை
மடுவென்கும் ஆளுங்கட்சி
மடுவென்றாலும் தவறுகளை
மலையென்கும் எதிர்க்கட்சி
இரண்டுமே தவறுதான்.

சுற்றிவரும் பூமியை
பற்றி இழுக்கிறது சூரியன்
ஈர்ப்பு விசையால்
உகலம் என்னவோ - சூரியனை
விலகல் விசையுடனேயே
சுற்றி வருகிறது;
ஈர்ப்பு விசையும்
விலகல் விசையும்
எதிர் எதிர் விசையென்றாலும்
பூமியை நிலை நிறுத்தும்
பொது நோக்கில்
இரண்டும் ஒன்றாகவே.

வலுவுள்ள எதிர்க்கட்சியும்
வலிமையான ஆளுங்கட்சியும்
இப்படி இருந்தாலே
ஜனநாயகம் சிறக்கும்
பூலோக சொர்க்கம் திறக்கும்!

எழுதியவர் : ஆ.திருநாவுக்கரசன் (30-May-13, 5:22 pm)
சேர்த்தது : babujcr
பார்வை : 75

மேலே