ஈழத்தின் கண்ணீர்
நித்தம் நித்தம்
ஒரு யுத்த பயணம்
எங்கள் வாழ்வில்..............
கைகள் துண்டாகி
கால்கள் ரெண்டாகி
உயிரை இழந்து இன்னும் பெற முடியவில்லை
எங்கள் சுதந்திரத்தை .........
ஈழப்பதர்க்கு ஒன்றும் இல்லை எங்களிடம்
இருந்தும் ஈழக்கிறோம் எங்கள் உயிரை
சுந்திரம் என்னும் காற்றை சுவாசிக்க.....
தரிசு நிலம் கூட விலை நிலமாக மாறும்
எங்கள் வாழ்வு என்னும்
தரிசு நிலம் விலை நிலமாவது எப்போது ??????
சூரியன் கூட ஒருநாள் தோன்றாமல்
இருக்கலாம்..
எங்கள் உயிரை ஒருநாளும் ஈழக்காமல்
இருந்தது இல்லை .......
எங்களிடம் கண்ணீர் கூட
வற்றிவிடது
அதனால் தான் சிந்துகிறோம் ரத்தத்தை
கண்ணீராக ...
தாய் இழந்த குழந்தை போல
தலைவனை இழந்து நிற்கிறோம்
அனாதையாக ...................